அடிமுறை ஆதி தமிழனின் ஆயுதம் இல்லா முதல் போர்க்கலை அடிமுறையே. இந்த விளையாட்டு ஆயக்கலை 64 ல் கைகலப்பு என்ற 31வது கலையாக உள்ளது... கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி, தமிழ் குடி மக்கள் என்ற பெருமை ஏற்ப அமைந்த அடிமுறை விளையாட்டு தற்போது கேரளத்தில் களரி என்று பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த அடிமுறை விளையாட்டானது உடலில் உள்ள வர்ம புள்ளிகளை சரியாக தெரிந்து கொண்டு தாக்கினால் 5 நிமிடத்தில் 20 எதிராளிகளை நிலை குலய செய்ய முடியும்... அதேசமயம் தட்டுமுறை மற்றும் இலக்கு முறை இவை இரண்டும் தெரிந்து இருந்தால் மட்டுமே அடிமுறையை பயன்படுத்த வேண்டும்... இல்லையென்றால் எதிரொலிக்கு அரை மணி நேரத்தில் உயிர் பிரிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது... நம் பாரம்பரிய பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அடிமுறைச் சுவடுகள் மற்றும் பக்குவப்பட்ட மாணவர்களுக்கு தட்டுமுறை மற்றும் இலக்கு முறை இவைகளை பயிற்சி அளித்து வருகின்றோம்...