about
about
about
about
பாரம்பரிய பள்ளி 2021 முதல்

அடுத்த தலைமுறையின் ஆரோக்கியமான கல்வி

நமது பாரம்பரிய பள்ளியானது 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளி... இப்பள்ளியின் நோக்கங்கள் ஆயக்கலை 64 ல் வித்தகன் படைத்தவன் தமிழன் இவ்வுலகிற்கே வாழ்வியலை கற்றுக் கொடுத்த சமூகம் நம் சமூகம்... இத்தகைய சிறப்பு மிக்க நம் தமிழினத்தின் மறைக்கப்பட்ட மற்றும் மறக்கப்பட்ட பாரம்பரியமான முறைகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் பள்ளியே நம் பாரம்பரிய(மரபு) பள்ளி... இப்பள்ளி எந்த மதம் சார்ந்தும் இனம் சார்ந்தும் இல்லாமல் அனைத்து உயிரினங்களுக்குமான சமநிலையான பள்ளியாக செயல்பட்டு வருவதே நம் பாரம்பரிய(மரபு) பள்ளி... பாரம்பரிய விவசாயம், விளையாட்டு, நடனம், இசை , மருத்துவம், உணவு முறை , கல்விமுறை, இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்தல் ஆகியவற்றில் முனைப்பாக செயல்படும் பள்ளியே நம் பாரம்பரிய(மரபு) பள்ளியாகும்...

பாரம்பரிய பள்ளியின்

பயிற்சி வகுப்புகள்!

பாரம்பரிய பள்ளி மாணவர்களின்

பதக்கங்கள் மற்றும் பரிசுகள்

நமது பாரம்பரிய பள்ளி மாணவர்கள் இதுவரை மாநிலம் மற்றும் தேசியப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்கள் மற்றும் பரிசுகள் பெற்றுள்ளார்கள். நமது நமது பாரம்பரிய பள்ளி மாணவ மாணவிகள் கன்னியாகுமரி சென்னை புதுக்கோட்டை பட்டுக்கோட்டை கொடைக்கானல் கோயமுத்தூர் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை திருச்சி அருப்புக்கோட்டை போன்ற மாவட்டங்களில் சிறப்பான விளையாட்டு வெளிப்படுத்தி சிறப்பு பரிசுகளும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நமது பாரம்பரிய பள்ளியில் விளையாட்டு மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய செல்வி.நதியா அவர்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று தற்போது மேல்நிலைக் கல்வி பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி பல தங்க பதக்கங்களை வென்ற மாணவன் செல்வன். சத்தியசீலன் அவர்கள் தற்போது தலைநகர டெல்லியில் யுபிஎஸ்சி தேர்வுக்கு பயின்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது... இத்தகைய சிறப்புமிக்க வாய்ப்புகளை கிராமப்புறங்களில் உள்ள மாணவ மாணவிகளுக்கு வழங்கி பாரம்பரிய பள்ளிக்கு உறுதுணையாக இருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதன்பட்டவூர் கிராமத்தை சேர்ந்த மதிப்பிற்குரிய ரா. சத்திய சுந்தரம் IPS (DIG) Delhi . அவர்களுக்கு பாரம்பரிய பள்ளி நன்றி தெரிவித்துக் கொள்கின்றது.

பாரம்பரிய பள்ளியை ஊக்குவிக்கும்

திரு R. சத்திய சுந்தரம் IPS (DIG)Delhi
அவர்களுக்கு நன்றி

நாம் மறக்கப்படும் மற்றும் மறைக்கப்படும் பாரம்பரியமான மரபு முறைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் நமது பாரம்பரிய பள்ளிக்கு அனைத்து அறிவுரை மற்றும் ஆலோசனைகள் மற்றும் முன்னேற்பாடுகள் அனைத்தையும் சிறப்பாக வழங்கிக் கொண்டு இருக்கும் மதிப்பிற்குரிய திரு R. சத்திய சுந்தரம் IPS (DIG)Delhi. அவர்கள். அவர்களின் நோக்கங்கள் : கிராமப்புறங்களில் உள்ள மாணவ மாணவிகள் மற்றும் அடுத்த தலைமுறை குழந்தைகள் உடல்நலம் மனநலம் கல்வி விவசாயம் இவற்றை சிறப்பாக செயல்படுத்திடவும் இதுபோன்று அனைத்து மாவட்டத்திலும் ஒவ்வொரு பாரம்பரிய பள்ளி அமைப்பதற்கும் ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளோம் என்றும் உறுதி அளித்துள்ளார்... அதேசமயம் பாரம்பரிய பள்ளியில் விளையாட்டு மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தாமே முன்வந்து செய்து கொடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். அனைத்து மாணவ மாணவிகளும் பாரம்பரிய பள்ளியில் பயிற்சி பெற்று உடல் நலம் மற்றும் சமூக நலம் காத்து உறுதியான இந்தியாவை உருவாக்குவோம் என்று வேண்டிக் கொள்கின்றார்.

FAQ
பாரம்பரிய பள்ளியின் பயிற்சிகள் தொடர்பான

கேள்விகள் & பதில்கள்

உடல் நலம் மற்றும் மனநலம் உறுதியாகும், பயிற்சியின்போது பாரம்பரிய உணவுகள் உட்கொள்ளுவதின் மூலம் நோய்வாய் படுவதிலிருந்து தவிர்க்கலாம். பாரம்பரிய உணவைத் தேடுவதன் மூலம் பாரம்பரிய விவசாயத்தை கற்றுக் கொள்ளலாம். பாரம்பரிய விளையாட்டை கற்றுக் கொள்வதன் மூலம் நம் முன்னோர்களின் மருத்துவ பயன்களையும் கற்றுக் கொள்ள முடியும். இப்போது பயிற்சியை கற்றுக் கொள்வதன் மூலம் நாம் அடுத்த தலைமுறையினருக்கு நம் பாரம்பரியத்தை கொண்டு செல்ல முடியும்.

பாரம்பரிய பள்ளியில் சேர்க்கை எப்போதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்... மைதானத்திற்கு காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து நேரடியாக பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.

ஆன்லைன் வகுப்பு எடுப்பதன் மூலம் மாணவ மாணவிகள் பாரம்பரிய உணவை தொடர்ந்து பின்பற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்தால் ONLINE வகுப்புகள் எடுக்கப்படும்.

காலை (5.30 AM முதல் 8.30 AM வரை) மற்றும் மாலை (4PM முதல் 6.30PM வரை) இரு வேலைகளிலும் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஐந்து வயதிற்கு மேற்பட்ட அனைவராலும் பயிற்சியை மேற்கொள்ள முடியும்.

childrens
Testimonials

Parents Reviews