கரல கட்டை கை கரல ,பிடி கரல , படி கரல , குஸ்தி கரல, தொப்ப கரல, கதாயுதம் ஆகிய வகைகள். கரல பயிற்சிகளில் முதலாவதாக மெய்ப்படம் எனும் தேகப் பயிற்சி பயிற்றுவிக்கப்பட்டு பிறகு கை கரல பயிற்சி அளிக்கப்படும்... இந்த பயிற்சியானது மாணவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான பயிற்சி. இந்த விளையாட்டை விளையாடி கொண்டிருக்கும்போது நமது உடலில் அதிக அளவில் சக்திகள் வெளிப்படும். இரண்டு மணி நேரம் தொடர்ந்து விளையாடினாலும் உடலில் எந்த சோர்வும் இருக்காது. கரல பயிற்சி முழுமையாக கற்ற பிறகு சிலம்பம் விளையாட துவங்கினால் சிலம்ப கம்பை மிகவும் எளிமையாக சுழற்ற முடியும்... இவைதான் முறையும் கூட. நம் பள்ளி இதுபோன்ற முறையான பயிற்சிகளை அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு கொண்டு செல்கிறது... கரல கட்டை விளையாடும் போது நம் உடலை சுற்றி ஆறா மருத்துவம் இருப்பதை நாம் உணர முடியும். நம் முன்னோர்களின் கரல கட்டை மறக்கப்பட்டு தற்போது தம்புல் கட்டையாக உருமாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.