ஆயுதம் இல்லாத கைகலப்பு விளையாட்டுகளில் அடிமுறை யை போன்றே குத்து வரிசையில் ஓர் ஆயுதம் இல்லா விளையாட்டு... இந்த விளையாட்டானது சோழர் காலங்களில் உடல் தேகத்திற்கான தவிர்க்க முடியாத ஓர் கலையாக அமைந்திருந்து உள்ளது. தற்போது வரைக்கும் கூட சோழர் குத்து வரிசை என்று ஒரு விளையாட்டுக்கு பெயரும் அழைக்கப்பட்டு வருகின்றது. இந்த விளையாட்டை நாம் மறக்கப் பட்டதால் தற்போது வெளிநாடுகளுக்கு இவை பறந்து சென்று கராத்தே குங்ஃபூ என்று உருமாற்றம் அடைந்து அவர்களால் பொக்கிஷமாக வளர்த்தெடுக்கப்பட்டு பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர். நமக்கான குத்து வரிசையை அடுத்த தலைமுறைக்கு முறையாக எடுத்துச் செல்லுவது நம் பள்ளியின் முதல் நோக்கமாகும்... பயிற்சியின்போது மாணவர்களுக்கு சிலம்ப கம்பு கொடுப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு வரைக்கும் குத்துவரிசை விளையாட்டு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன...