மடுவு(மான் கொம்பு )

முந்தைய காலங்களில் மான் போன்ற விலங்குகளை மனிதன் உணவிற்காக வேட்டையாடிய பிறகு அதன் கொம்பை எடுத்து கூர்மையாக்கி தற்காப்பிற்காக பயன்படுத்தப்பட்டு வந்தவையே மான் கொம்பு ஆகும். தற்போது இந்த மடுவு விளையாட்டு என்ற மான் கொம்பு விளையாட்டானது மான் பதுங்கும் போது புலி மானை அடித்தல் போன்றும், மான் துள்ளி குதித்து ஓடும் போது புலி வேட்டையாடுவது போன்றும், புலியிடம் மான் போராடி தப்பித்து துள்ளி குதித்து ஓடுவது போன்றும் பாடங்கள் வடிவமைக்கப்பட்டு நமது பாரம்பரிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன... இந்த விளையாட்டில் கோர்வை பாடும் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு மாணவ மாணவிகள் விளையாடும் போது மிகச் சிறப்பாகவும் அமைந்து இருக்கும்.