92 வகை நாட்டு மாட்டு இனங்களில் தற்போது 18 இன மாடுகள் மட்டுமே நம் பாதுகாத்து உள்ளோம்... இதிலும் அழிவின் விளிம்பில் நமது டெல்டா மாவட்டத்திற்கு உகந்த ரகமான உம்பளச்சேரி நாட்டு மாட்டு இனத்தை நாம் பாரம்பரிய பள்ளி பாதுகாப்பு வருகின்றோம்... வருடம் தோறும் பொங்கல் திருநாள் அன்று ஏழு கிராமங்களில் உள்ள ஏழு மாணவ மாணவிகளுக்கு உம்பளச்சேரி காளைகள் மற்றும் பசுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன... உம்பளச்சேரி ரகங்களில் சென்னா பிள்ளை, செவலைப்பிள்ளை ஆட்டுக்காரி, கணபதி ஐயர் மாடு, சூரியன் காட்டுமாடு, என்ற வகைகளும் உள்ளன. இந்த உம்பளச்சேரி இனமானது நான்கு கால் வெள்ளை நிறம்,வால் வெள்ளை நிறம்,வயிற்று பகுதி வெள்ளை, நெற்றி வெள்ளை போன்ற அமைப்புகளில் இருக்கக்கூடியவை. இந்த இனக் காளைகள் 1500 கிலோ எடையை இழுத்து செல்ல வல்லமை உடையது. தொடர்ந்து எட்டு மணி நேரம் சகதியில் நடக்க வல்லமை உடையது. இவற்றின் கொம்புகள் கருடமுடாக முளைப்பதால் காளைகளுக்கு கொம்புகள் வெட்டப்பட்டு, முகப்பகுதி சுடப்பட்டு ,காதுகள் வெட்டப்பட்டு இவற்றை பயன்படுத்தி வருகின்றனர்... உலக மாடுகளிலேயே உம்பளச்சேரி இன காளைகளுக்கு மட்டுமே காதுகள் வெட்டப்பட்டு, சூடு வைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன... இந்த இனப் பசுக்களின் சாணத்தில் அதிக அளவு மீத்தேன் உள்ளதால் இவை விவசாயத்திற்கு மரபு உரங்கள் தயாரிக்க அதிக அளவில் பயனுள்ளதாக அமைகிறது... எந்த ஒரு நோய் தாக்குதலுக்கும் பெரிதும் பாதிக்கப்படாத இனமாகவும் நமது நாட்டு இன மாடான உம்பளச்சேரி உள்ளது. நம் பாரம்பரிய பள்ளி இத்தகைய சிறப்புமிக்க இடத்தை பாதுகாத்து வருகின்றோம்.