பாரம்பரிய உணவு முறை

பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ மாணவிகளும் கட்டாயமாக பாரம்பரிய உணவு முறைகளான பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, சாமை, திணை, குதிரைவாலி,நாட்டுக்கோழி முட்டை, கேழ்வரகு கூழ்,அல்லது கம்பு கூழ் நீராகாரம் அல்லது மோர் இது போன்ற சிறுதானிய உணவுகளை கட்டாயம் பயிற்சிக்கு அனைவரும் எடுத்து வந்து உள்ளார்களா என்ன என்று சோதித்து விட்டு வகுப்பு ஆரம்பமாகும். இவற்றில் பழையன கழிதலும் புதிதான புகுதலும் கோட்பாட்டிற்கு ஏற்ப மாணவர்கள் விளையாடிய பிறகு வியர்வை துளிகள் வெளியேறிய பிறகு நமது சிறுதானிய உணவுகளை உட்கொண்டு மாணவர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வார்கள்... இது போன்ற நம் சிறுதானியங்களை உட்கொள்ளாமல் அவர்கள் விளையாட்டை தொடர்ந்தால் சிறிது நேரம் பயிற்சிக்குப் பிறகு அவர்களால் அனைத்து சக்தியை இழந்து ஓய்வுக்கு சென்று விடுகிறார்கள். தொடர்ந்து நம் சிறுதானியங்களில் உட்கொள்வதன் மூலம் ஒரு வாரங்களில் அவர்கள் முழு பயிற்சியில் ஆரோக்கியமாக விளையாடுகிறார்கள் என்பதை நிதர்சனமான உண்மையாக உள்ளது... இந்த உணவை உட்கொண்டு விளையாடுவதன் மூலம் பல நோய் நொடிகளில் இருந்து மாணவர்களை தற்காத்து எந்த மருத்துவமனைக்கும் செல்லாமல் ஆரோக்கியமாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...