நம் வாழ்வில் ஒன்றிய ஒரு அங்கமே விவசாயம். இந்த மரபு விவசாய முறைகளை ரசாயன உரங்கள் இன்றி நாட்டு பசு மாடுகளில் இருந்து எடுக்கப்படும் சாணம் மற்றும் கோமியத்திலிருந்து தயாரிக்கப்படும் பஞ்சகாவியம், அமிர்த கரைசல், மீனமமிலம், தேமோர் கரைசல், கொம்பு உரம் இது போன்ற பாரம்பரியமான மரபு முறைகளை மாணவ மாணவிகளுக்கு பயிற்றுவித்து, இதனுடன் விளையாட்டும் சேர்த்து நடவு வயல்களில் ஏர் கலப்பை இன்றி நவீன எந்திரங்கள் எதுவும் இன்றி அவர்களின் கால்களிலேயே சகதியாக்கி மிதித்து நடவு நட்டு பாரம்பரிய விவசாயத்தை அனைத்து மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்து வருகின்றோம்... நம் பாரம்பரிய பள்ளியில் சென்ற ஆண்டு 58 மரபு நெ ரகங்கள் பயிரிடப்பட்டு அறுவடையும் செய்து பயிற்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு உண்ணுவதற்கு ஏதுவாக தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றோம்... பாரம்பரிய பள்ளியில் பயிற்சி பெறும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மரபு காய்கறி விதைகளை வழங்கி அவர்களின் வீட்டிலேயே பயிரிடச் செய்து, அவற்றை அறுவடை செய்து, மீண்டும் பாரம்பரிய பள்ளிக்கு வழங்கினால் அவற்றை நல்ல விலைக்கு வாங்கிக் கொள்கின்றோம்...