நம் பள்ளி எந்த வேறுபாடும் இன்றி அனைவரும் சமம் என்ற கோட்பாட்டில் செயல்பட்டு வருகின்றது. வருடம் தோறும் பொங்கல் திருநாளன்று 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் அவரவர்கள் வீட்டில் இருந்து ஒரு கையளவு அரிசி எடுத்து வந்து ஒரே பானையில் பொங்கல் வைக்கப்படுகிறது. இதனால் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு எந்த வேறுபாடும் இன்றி அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை கற்றுக் கொடுத்து வருகின்றது. அதேசமயம், பயிற்சியின் போது சமநிலை, பிரிவு நிலை, சமநிலை, என்ற மூன்று வார்த்தைகள் மாணவர்களுக்கு முதற்கட்டமாக கற்பிக்கப்படும். இதில் சமநிலை என்பது? அனைவரும் சமம் என்பதே ஆகும். பிரிவு நிலை என்பது?யாரேனும் பிரிவு நிலையில் இருந்தால் மீண்டும் சமநிலைக்கு வர வேண்டும். என்று வலியுறுத்தி அவர்கள் சமநிலைக்கு வந்த பிறகு, பயிற்சிகள் தொடங்கப்படும். இதில் ஆண் பெண் வேறுபாடு, சிறியவர் பெரியவர் வேறுபாடு என்று எந்த வேறுபாடும் இன்றி அனைவரும் சமம் என்று கோட்பாட்டில் பயிற்சிகள் இனிதே துவங்கும்...