சிலம்பம் நான்கு மருத்துவர் கொண்ட ஒர் உன்னதமான தமிழ்மொழி சார்ந்த விளையாட்டு. முற்காலத்தில் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும், விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும் இருந்த இந்த கலை தற்போது நோய் நொடியில் இருந்து தற்காத்திட ஓர் விலை மதிப்பற்ற மருத்துவமாக பயன்படுத்தி வருகிறோம்... நம் கற்றுக் கொடுக்கும் பயிற்சிகள் : குறவஞ்சி சிலம்பம், துலுக்காணம், கள்ளப்பத்து ,பனையேறி மல்லு, கொம்பேறி முருக்கன், அலங்கார சிலம்பம், இரட்டை சிலம்பம் ஆகிய விளையாட்டுக்கள் நம் பாரம்பரிய பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு எளிமையாக கற்றுக் கொடுத்து வருகின்றோம்... இவ் விளையாட்டை விளையாடும் போது வர்மம் மருத்துவம், யோக மருத்துவம், ஆறா மருத்துவம் மற்றும் முழு உடல் பயிற்சி ஆகியவை ஒருசேர கிடைக்கும் ஒரு ஆச்சரியமான விளையாட்டு நம் சிலம்பம். இவற்றில் ஒரு மருத்துவம் இல்லாமல் விளையாடினாலும் அது முழுமையான சிலம்பமாக மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என்பது உண்மையாகவே உள்ளது.