முந்தைய காலங்களில் இந்த சுருள்வாளானது போர்ப்படைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் போது மற்ற எதிரிகள் தாக்காத வண்ணம் மற்றொரு இடத்திற்கு நகர்த்தி செல்ல புழுதியை கிளப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதமாக கூறப்படுகிறது. அதேசமயம் 10 எதிராளிகள் ஒன்றாக வந்தாலும் இந்த சுருள் வாழை வைத்து நம்மளால் எதிர்கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது. தற்போது அந்த சுருளானது அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு விளையாட்டு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது... இதில் ஒற்றை சுருவாள் வீச்சு இரட்டை சுருவாள் வீச்சு படை வீச்சு புழுதி வீச்சு போன்ற வீச்சுகள் நம் பாரம்பரிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு கற்றுக் கொடுத்து வருகின்றனர். இந்த சுருள் வாள் வீசும் போது அதிக அளவுலான சக்தி உடம்பில் தேவைப்படும்.