நம் பாரம்பரிய பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாலிதீன் பற்றிய தீமைகளை விளக்கி அதை ஒவ்வொரு மாணவர்கள் வீட்டில் இருந்தும் மாற்றத்தை கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். அதாவது காலியாக உள்ள தண்ணீர் பாட்டிலில் அவரவர்கள் வீட்டில் வாங்கி வரும் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் இவற்றிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்ற பாலிதீன் கவர்களை வெளியில் தூக்கி எறியாமல் அந்தக் கவரை எடுத்து காலியாக உள்ள பாட்டிலில் அடைத்து சேகரித்துப் பார்த்தால், ஒரு மாதம் ஒரு வீட்டில் பயன்படுத்தக்கூடிய அனைத்து பாலித்தீன் பைகளும் ஒரு காலியான பாட்டிலில் அடைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாணவர்களின் வீட்டிலும் இதுபோன்றே கடைப்பிடித்து வருகின்றனர். அதற்கு முன்பு பெற்றோர்கள் மளிகை மற்றும் காய்கறி பொருட்கள் வாங்குவதற்கு வெளியில் செல்லும்போது வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு பை களை எடுத்து கொடுத்து விடுவார்கள். அவ்வாறு பாலிதீன் கவர்களை காலியான பாட்டில்களில் நிரப்பி நம் பாரம்பரிய பள்ளியில் கொடுத்தால் நம் பாரம்பரிய பள்ளி மாணவர்களுக்கு சிறு சேமிப்பை கற்றுக் கொடுப்பதற்காக ஒரு உண்டியல் மற்றும் ஐந்து ரூபாய் வழங்கப்படுகின்றது... ஒவ்வொரு பாட்டிலுக்கும் தலா ஐந்து ரூபாய் மாணவர்களிடம் கொடுத்து பாலித்தீன் தவறுகளை அடைத்த பாட்டிலை வாங்கிக் கொள்கின்றோம்.இதுபோன்று கிராமங்களின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள இடங்களில் கிடைக்கும் பாலித்தீன் கவர்களை காலியான பாட்டிலில் நிரப்பி கொடுத்து குறைந்தது 200 ரூபாய்க்கும் மேல் நமது பாரம்பரிய பள்ளி மாணவர்கள் சிறு சேமிப்பு செய்துள்ளார்கள் . கடைகளில் சிறு பொருட்கள் வாங்கினாலும் அதில் ஏதோ பாலித்தீன் கவர் இருந்தாலும் அதை பத்திரமாக எடுத்துச் சென்று அந்தக் கவரில் அடைத்து வைத்து விடுகின்றனர். இதுபோன்று அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு நம் கற்றுக் கொடுப்பதன் மூலம் சுகாதாரக் கேடு இல்லாமல் நம் மண்ணும் ,மனிதனும் காக்கப்படுவோம் என்பதே நம் பாரம்பரிய பள்ளியின் நோக்கமாக உள்ளது... சேமித்துக் கொடுக்கும் பாலித்தீன் கவர்களை பாரம்பரிய பள்ளி பெற்று கொண்டு அவற்றை விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வண்ணம் இருக்கை அமைக்கப்பட உள்ளது... அதற்கான வேலைப்பாடுகள் நடந்து கொண்டும் உள்ளது...