வாள் வீச்சு

இரும்பு போர் ஆயுதங்களில் ஓர் உன்னதமான போர்க்கலை வாள் வீச்சு ஆகும். இந்த வாள் வீச்சு விளையாட்டானது பல மன்னர்களால் சிறந்த முறையில் கையாளப்பட்டு வெற்றிகள் பல கண்டுள்ளனர். தற்போது இவற்றை பயன்படுத்தி சந்தன வலிப்பு முறை, வெட்டு முறை, குத்து முறை, அறுப்பு முறை, வீச்சு முறை என்று வாள் வீச்சு அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு மேட்டிற்கு, விளையாட்டிற்கு ஏதுவாக வடிவம் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் ஒற்றை வாள்வீச்சு இரட்டை வாள்வீச்சு என்று பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றோம். மன்னர்கள் இந்த வாள் வீச்சை போரில் பயன்படுத்துகையில் ஒரு வாளின் உயரம் 5 அடியாகவும் அதன் எடை குறைந்தது 3 கிலோவாகவும் இருந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. இந்த வாள்வீச்சு பயிற்சியானது நமது பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஏழாவது பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது... இவற்றை மிகவும் நுணுக்கமாக விளையாட வேண்டும். மற்ற ஆயுதங்களில் கைதேர்ந்த மாணவர்கள் மட்டுமே இதை விளையாடினால் ஆபத்து இல்லாமல் அமையும். நமது பாரம்பரிய பள்ளியில் இந்த வாள்வீச்சு விளையாட்டானது மாணவர்களுக்கு மிக எளிமையான முறையில் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றது.