வேல் கம்பு ஓர் போர் ஆயுதம். இந்த வேல் கம்பு வீச்சில் சிறந்து விளங்கிய வீரமங்கைகள் குயிலி மற்றும் வேலு நாச்சியார் இவர்கள் இருவருமே வேல் கம்பு வீச்சில் சிறந்த வீரமங்கைகளாக கூறப்படுகின்றனர். எதிராளிகளை வேல் கம்பு வைத்து, பாம்பு கொத்துவது போல் கொத்தி எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கவில்லை என்றால் எதிராளிகளின் உடம்பிலேயே அவை பதிந்து நம் கையில் இருந்து வேல்கம்பு சென்றுவிடும். பிறகு நாம் வேறு ஒரு எதிராளியை தாக்க முடியாது. இதனால்தான் வேல் கம்பு ஒரு நொடிக்கும் குறைவான நேரத்திற்குள்ளேயே நாம் குத்தி எடுக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது நம் பாரம்பரிய பள்ளி. இதில் ஒரு பாம்பு 16 முறைகளில் படம் எடுத்து கொத்துமாம். அதேபோல் நம் வேல் கம்பு வீச்சில் 16 முறைகளில் குத்துகின்ற பாடம் நாகம் 16 என்றும், நாகம்போல் சீறுவதால் வேல்கம்பு வீச்சை நாகசீரல் என்றும் நமது மாணவர்களுக்கு பயிற்சி அளித்து கொண்டு வருகின்றோம்...